Sunday, April 12, 2015

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஜாதகம் (Sri Ramana Maharishi Horoscope Analysis)


























பகவான் ரமண மகரிஷியைப் பற்றி அறியாதவர்கள் கீழே உள்ள Link ஐ கிளிக்
செய்யவும்

http://en.wikipedia.org/wiki/Ramana_Maharshi

பிறந்த தேதி : டிசம்பர் 30 , 1879
 நேரம் : 1:00am
 இடம் :திருச்சுழி ,அருப்புகோட்டை அருகே
கன்னி  லக்னம் . லக்னாதிபதியும், 10 ஆம் இடத்து அதிபதியுமான புதனும் பாக்யாதிபதி சுக்கிரனும்  இணைந்து அவருக்கு பெரும் புகழ் கொடுத்தார்கள் .
அது மட்டுமல்லாமல் லக்னாதிபதி தைரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உள்ளார் .சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி பகல் இரவு தெரியாமல் , உண்ணாமல் தவம் இருக்க தைரியம் வேண்டும் அல்லவா ?

பத்தாம் இடத்தில் உள்ள கேது அவருக்கு ஞானத்தை கொடுத்தார் .
 சந்திரனுடைய இணைவு கேதுவுக்கு மேலும் வலு சேர்த்தது .அத்துடன் பத்தாம் இடத்திற்கு  குருவின் பார்வையும் உள்ளது .இது அவரை இளம் வயதிலேயே மிகப் பெரிய ஞானி ஆக்கியது

தாய்க்கான காரகன் சந்திரனும் , தந்தைக்கான காரகன் சூரியனும் ராகு  கேதுவின் பிடியில் சிக்கி உள்ளார்கள் .மகரிஷியின் தந்தை இளம் வயதிலேயே இறந்து விட்டார் .பின்பு அவர் தாயைப் பிரிந்து திருவண்ணாமலைக்கு சென்று சென்று விட்டார்

6ஆம் இடத்து அதிபதி  சனி  7ஆம் இடத்தில் உள்ளார் .7ஆம் இடத்து அதிபதி 6ஆம் இடத்தில் உள்ளார் .தைன்ய பரிவர்த்தனை . 8ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளார் .இவையே அவர் குடும்ப வாழ்க்கையில் ஈடு படாதததற்கு
 காரணம்

1892 ஆம்  ஆண்டு கேது புக்தியில் தந்தையை இழந்தார் .

1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சனி தசை , சூரிய புக்தியில் வீட்டை விட்டு வெளியேறினார் . ராகு உடன் நான்காம் இடத்தில் உள்ள சூரியன் அவரை வீட்டை விட்டு பிரித்தது . 5 ஆம் இடத்து அதிபதியான சனி அவருக்கு ஞானத்தை வழங்கினார் .

1916இல்  புதன் தசையின் போது அவர் தாயும் , தமையனாரும் திருவண்ணாமலைக்கு வந்து விட்டார்கள் .

19 மே 1922இல் தாயாரை இழந்தார் .அப்பொழுது கேது தசை கேது பக்தி நடப்பதை கவனிக்கவும்.
1932  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் PAUL BRUNTON என்னும் எழுத்தாளர் ரமண மகரிஷியை சந்தித்தார் . அப்பொழுது மகரிஷிக்கு சுக்கிர தசை , சுக்கிர புக்தி .
பாக்யாதிபதியான சுக்கிரன் ரமண மகரிஷியை PAUL BRUNTON மூலமாக உலகம் அறிய வைத்தார் .
ஏப்ரல் 14 , 1950 இல்  சூரிய தசை , சூரிய புக்தியில் மகரிஷி சிவனடி சேர்ந்தார் .
சூரியன் 12 ஆம் இடத்து அதிபதி மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதை கவனிக்கவும்









No comments:

Post a Comment