Wednesday, April 8, 2015

Horary Astrology for Job change (பிரசன்ன ஜோதிடம்) - When will I change the Job


பிரசன்ன ஜோதிடம் கேள்வி கேட்கும் நேரத்தை அடிப்படையாக கொண்டது .
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் கிரஹ நிலைகளுக்கும் தொடர்பு உண்டு . கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள க்ரஹ நிலைகளை ஆராய்வதன் மூலம் கேள்விக்கான பதிலை அறிய முடியும் .

நண்பர் ஒருவர் வேறு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார் .
என்னிடம் எப்போது வேறு வேலை மாறுவேன் என்று கேட்டார்.



உதய லக்னம் கும்ப லக்னம் . லக்னாதிபதி சனி லக்னத்துக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார் . இது கேள்வி தொழில்  சம்பந்தமானது எனக் காட்டுகிறது .

தொழில் மாற்றத்துக்கு ஆறாம் இட அதிபதி அல்லது  பன்னிரெண்டாம் இட அதிபதி , லக்னாதிபதி உடன் இதசாலா யோகத்தை உண்டு பண்ண வேண்டும் .

இங்கு ஆறாம் இட அதிபதி சந்திரன்  சனியை விட  குறைவான  கோணத்தில் உள்ளார் . ( Angle of fast moving planet should be lesser than the slow moving planet . Here angle of moon 1.22 deg which is less than angle of saturn )

இவை களுக்கு இடையில் நான்கு  கட்டங்கள் உள்ளன . இதை நான்கு மாதங்கள் எனப்  பொருள் கொள்ள வேண்டும் .

எனவே அவர் நான்கு மாதங்களில் வேறு பணியில் சேருவார்  என்று கூறினேன் . அவர் இப்போது வேறு பணியில் இருக்கிறார்





No comments:

Post a Comment