கும்ப லக்னம் , கும்ப ராசி .லக்னத்தில் சூரியனும் புதனும் சந்திரனும் சேர்ந்து உள்ளார்கள் . புதாத்திய யோகம் நல்ல பேச்சு திறனை காட்டுகிறது
5 ஆம் இடமான பூர்வ புண்ய ஸ்தானத்தில் குரு அமர்ந்து லக்னத்தை பார்க்கிறார் .5 ஆம் இடத்து அதிபதி லக்னத்தில்உள்ளார் .ஞானிகளுக்கு பொதுவாக பூர்வ புண்ய ஸ்தானம் மிக நன்றாக இருக்கும் . அது அவர்கள் முன் ஜென்மத்தில் செய்த தவத்தின் பயன் .
கர்மஸ்தானமான பத்தாம் இடத்தில் ஞான காரகன் கேது உள்ளார் . இது அவரின் ஞானத்தை காட்டுகிறது .
லக்னாதிபதி 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார் . அவர் புகழுக்கும் சனியே காரணமாகிறார் .
இரண்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் . இவர் திருமணமானவர் என்பதை நினைவில் கொள்க .ஏழாம் இடத்து அதிபதி மற்றும் சுக்கிரன் அதிகமாக பாதிக்கப்படவில்லை .இவர் மனைவி அன்னை சாரதா தேவியும் ஒரு ஞானி .இவரது ஞான யோக வாழ்க்கைக்கு துணை நின்றவர் .
நரம்பு மண்டல காரகன் புதன் லக்னத்தில் இருக்கிறார் .புதன் வர்கோத்தமம் ஆகி உள்ளார் . இவர் மென்மையான நரம்பு மண்டலத்தை கொண்டவர் .ஒரு முறை சுவாமி விவேகானந்தா இவர் படுக்கைக்கு அடியில் ஒரு நாணயத்தை வைத்து விட்டார் .இவரால் தூங்க முடியவில்லை .அவர் படுக்கைக்கு அடியில் தேடச்சொல்ல , அந்த நாணயம் எடுக்கப் பட்டது .இதைப்பற்றி விவேகானந்தா கூறும் போது , அவர் தொடர்ந்து த்யானம் செய்ததால் அவர் நரம்புகள் மிக மென்மை ஆகி விட்டன என்றார் .
ஏழாம் இடத்து அதிபதியும் , ஆறாம் இடத்து அதிபதியும்,எட்டாம் இடத்து அதிபதியும் இணைந்து லக்னத்தில் உள்ளனர் .திருமணம் ஆன போதும் மனைவியை தாயாகவே கருதினார் .
அற்புதமான ஜாதகம் !!!