பத்திரிகைகளில் தினப்பலன் , வார பலன் , மாத பலன்கள் வருவதை நாம் பார்க்கிறோம் .அதைப் படித்துவிட்டு நடக்க வில்லை என்றால் ஜோதிடம்
பொய் என்று சொல்பவர்களை நான் பார்த்துள்ளேன் .
உலகத்தில் உள்ள அனைவரும் பன்னிரண்டு ராசிகளில் ஒரு ராசியில் சேர்ந்து விடுவார்கள் . மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வீடு வாங்குவார்கள் என்று சொன்னால் , உலகத்தில் பன்னிரெண்டில் ஒருவர் வீடு வாங்க போகிறார் , அவர் மேஷ ராசிக்காரர் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?
ஒருவர் ஜாதகத்தில் என்ன தசை , என்ன புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து ,
ஜாதகத்தை முழுவதுமாக அலசி விட்டு தான் பலன் சொல்ல வேண்டுமே தவிர வெறும் ராசியை வைத்து பலன் கூறக் கூடாது .
அப்போது ராசி பலன்களை மொத்தமாக புறக்கணித்து விடலாமா என்றால் இல்லை .
கோச்சார கிரக நிலைகள் முக்கியம் . அனால் அவைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது ஜாதகத்தின் தன்மையை பொறுத்தது .
கோச்சாரத்தில் நாம் சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் ,குரு பெயர்ச்சி பலன் என்று சொல்கிறோமே தவிர சுக்கிர பெயர்ச்சி பலன் , புதன் பெயர்ச்சி பலன் என்று சொல்வதில்லை .இதற்குகாரணம் இவைகள் வேகமாக நகரும் கிரகங்கள் .எனவே இவற்றை ஆண்டு பலன் கூறும் பொது கணக்கில் எடுத்து கொள்வதில்லை .
தனியாக வெறும் ராசியை மட்டும் வைத்து பலன் கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை .ஜாதகத்தை முழுக்க அலசிய பிறகே பலன் கூற முடியும் .
கோச்சார கிரக நிலைகளை , ஜாதகத்தின் தசா புக்தி பலனுடன் இணைத்து ஆண்டு பலனை கணிக்க வேண்டும் .
தசா நாதன் மற்றும் புக்தி நாதன் , லக்னத்தில் இருந்து எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் , அவரை சுப கிரகங்கள் பார்க்கின்றனவா , இல்லை பாவ கிரகங்கள் பார்க்கின்றனவா, அவர் எந்த இடத்து அதிபதியுடன் இணைந்து உள்ளார் . இவை அனைத்தையும் அலசியே பலன் கூற வேண்டும்